கோப்புப்படம். 
இந்தியா

ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல்  வன்கொடுமை செய்தவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

மத்தியப் பிரதேசம் காட்னி மாவட்டத்தில் ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

ஜாபல்பூர் - ரீவா மீமு ரயிலில் பயணித்த அந்தப் பெண்ணைக் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பன்காஜ் குஷ்வாஹா என்ற நபரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குற்றவாளியிடமிருந்து தப்பித்த பெண், சாத்னா ரயில் நிலையக் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். ரீவா ரயில் நிலையத்தை அடைந்தவுடன் கழிவறையின் உள்ளே கதவைப் பூட்டிக்கொண்ட குற்றவாளியை, பூட்டை உடைத்து ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

குற்றவாளியின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகக் துணைக் காவல் கண்காணிப்பாளர் சரிகா பாண்டே தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு

SCROLL FOR NEXT