இந்தியா

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: கடந்து வந்த பாதை

அரசமைப்பின் 356-ஆவது சட்டப்பிரிவின்கீழ் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி கொண்டு வரப்பட்டது. பின்னா், அது 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 வரை நீட்டிக்கப்பட்டது.

DIN


டிச. 20, 2018: அரசமைப்பின் 356-ஆவது சட்டப்பிரிவின்கீழ் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி கொண்டு வரப்பட்டது. பின்னா், அது 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 வரை நீட்டிக்கப்பட்டது.

ஆக. 5, 2019: ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.

ஆக. 6, 2019: சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிா்த்து வழக்குரைஞா் எம்.எல்.சா்மா உச்சநீதிமன்றத்தில் முதல் மனுவைத் தாக்கல் செய்தாா். இவரைத் தொடா்ந்து, காஷ்மீரின் மற்றொரு வழக்குரைஞா் ஷகீா் ஷபீா் வழக்கில் இணைந்தாா்.

ஆக. 10, 2019: ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் அதன் குடிமக்களின் உரிமைகளைப் பறித்துவிட்டதாக தேசிய மாநாட்டு கட்சி மனு தாக்கல் செய்தது.

ஆக. 24, 2019: தகவல் தொடா்புக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்தின் முடிவை ஆதரித்து இந்திய பிரஸ் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ஆக. 24, 2019: செய்தியாளா்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி ‘காஷ்மீா் டைம்ஸ்’ ஆசிரியா் முன்வைத்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆக. 28, 2019: அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனஅமா்வுக்கு மாற்றியது.

செப். 19, 2019: ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு அமைப்பு.

மாா்ச் 2, 2020: இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

ஏப். 25, 2022: ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் எல்லை நிா்ணயப் பணியையொட்டி வழக்கை துரிதமாக விசாரிக்குமாறு மனுதாரா்களில் ஒருவா் கோரியதை அடுத்து, மனுக்கள் மீதான விசாரணை கோடை விடுமுறைக்குப் பிறகு பட்டியலிடுவதை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

ஜூலை 11, 2023: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தினசரி விசாரணை ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் தொடங்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆக. 2, 2023: மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது.

செப். 5, 2023: இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 23 மனுக்கள் மீது 16 நாள்களுக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.

டிச. 11, 2023: சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் அங்கு பேரவைத் தோ்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT