சுப்ரியா சுலே | கோப்பு 
இந்தியா

நீங்கள் மீண்டு வருவீர்கள்...: சுப்ரியா சுலே

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தனது தந்தையும் கட்சி நிறுவனருமான சரத் பவாருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

DIN

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கட்சித் தலைவரும் தந்தையுமான சரத் பவாரின் 83-வது பிறந்தநாளுக்குத் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். 

இந்தச் சூழலில் இருந்து அவர் மீண்டு வருவார் என்றும் போராட்டக் காலத்தை வெற்றி கொள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சுப்ரியா.

சரத் பவார் நிறுவிய தேசியவாத காங்கிரஸ்,  இந்த ஆண்டு இரண்டாக பிளவுபட்டது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் உடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜகவில் துணை முதல்வராக இணைந்தார்.

சுப்ரியா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், திங்கள்கிழமை சரத் பவார் நாசிக்கில் வெங்காய விவசாயிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். அதேயே தான் பரமதி தொகுதி எம்.பியாக மக்களவையில் பேசினேன்.

2024 மே, 31 வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து நாசிக் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

சுலே தனது தந்தையைக் குறிப்பிட்டு, “இந்தப் போராட்டக் காலத்தை எல்லாம் நீங்கள் தாண்டி வந்துவிடுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். நாம் போராடி வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவ சேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சரத் பவாரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT