இந்தியா

சத்தீஸ்கரில் 2 நாள்களில் நிகழ்ந்த 2வது சம்பவம்!

DIN

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் மாவட்ட ரிசர்வ் காவலர் இருவர் காயமடைந்தார்.

கிஸ்டாரம் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட சலேடோங் கிராமத்திற்கு அருகே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. திங்களன்று இதேபோன்ற சம்பவத்தில் இரண்டு பாதுகாப்புப்பணியாளர்கள் காயமடைந்தனர். 

சாலை கட்டுமானம் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கு வசதியாக, நக்சல்களின் கோட்டையான சலேடோங்கில், மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் புதிய முகாம் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

இந்த முகாம் சிந்தல்நார்-கிஸ்டாரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. அப்பகுதியில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இது முக்கியமானதாக இருக்கும் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர். 

முகாம் அமைப்பதற்கு முன், பாதுகாப்புப் பணியாளர்களின் கூட்டுக் குழுக்கள், நக்சலைட்டுகளால் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகளைக் கண்டறிய, அப்பகுதியில் நடவடிக்கையை மேற்கொண்டன.

காயமடைந்த பாதுகாப்பு வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். திங்களன்று, அப்பகுதியில் இதேபோன்ற வெடிகுண்டு வெடிப்பில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர்.

தற்போது அந்த பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT