நீதிபதி பி.ஹெச்.லோயா 
இந்தியா

நீதிபதி லோயா மரணம் குறித்து எஸ்ஐடி விசாரணை வேண்டும்: சிவசேனை தலைவர் வலியுறுத்தல்

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் தான்வே கோரிக்கை விடுத்துள்ளார்.

DIN

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் தான்வே கோரிக்கை விடுத்துள்ளார்.

திஷா சாலியானின் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு அரசு நடவடிக்கை எடுக்குமானால், அதே போல சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா மரணம் குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தான்வே தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா, 2014 டிசம்பர் 1-ஆம் தேதி நாக்பூரில் நண்பருடைய மகளின் திருமணத்திற்குச் சென்றிருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளராக இருந்த திஷா சாலியான் 2020 ஜூன் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திஷா சாலியான் தற்கொலை செய்துகொண்டதாக மும்பை போலீசாரால் கூறப்பட்டாலும், பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

அதையடுத்து கடந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சாலியானின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் திஷா சாலியான் வழக்கில் எஸ்ஐடி விசாரணை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய சிவசேனை கட்சியைச் சேர்ந்த தலைவர் தான்வே, “திஷா சாலியான் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமானால், நீதிபதி லோயா மரணம் தொடர்பாகவும் எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT