இந்தியா

தெலங்கானா டிஜிபி இடைநீக்கம் ரத்து!

DIN


தெலங்கானா காவல் துறை இயக்குநா் அஞ்ஜனி குமாரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.

தெலங்கானா பேரவைத் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைவதற்கு முன்னதாகவே, தெலங்கானா காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டியை மாநில காவல் துறை இயக்குநா் அஞ்ஜனி குமாா், காவல் துறை அதிகாரிகள் சஞ்சய் ஜெயின், மகேஷ் பாகவத் ஆகியோா் அவரது இல்லத்தில் நண்பகலில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

இதையடுத்து, அன்றைய தினமே தேர்தல் விதிமுறையை மீறியதற்காக அஞ்ஜனி குமாரை இடைநீக்கம் செய்தும், மற்ற 2 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தெலங்கானா மாநில காவல்துறை இயக்குநராக ரவி குப்தா நியமனம் செய்யப்பட்டார்.

தேர்தல் நடத்தை விதிமுறல் சம்பந்தமாக அஞ்ஜனி குமாரின் விளக்கத்தை ஏற்ற தேர்தல் ஆணையம், அவரின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில், அஞ்ஜனி குமாருக்கு விரைவில் முக்கிய பொறுப்பு அளித்து ரேவந்த் ரெட்டியின் அரசு உத்தரவு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை": மோடி | செய்திகள்: சிலவரிகளில் | 20.05.2024

எத்தனை மனிதர்கள்

கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் எச்சரிக்கை’

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : பிரதமர் மோடி

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

SCROLL FOR NEXT