முகப்பு
இந்தியா

மும்பை ரயில் நிலையத்தில் தீ விபத்து

மும்பை ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
கோப்பு
பகிர்:

மும்பையின் பரபரப்பான லோக்மான்யா திலக் ரயில் நிலையத்தில் திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ரயில்கள் நிலையத்துக்குள் வருவதிலும் புறப்படுவதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. 

‘ஜன் ஆஹார்’ உணவு தயாரிக்கும் இடத்தில் இந்த விபத்து பிற்பகல் 2.45 மணியளவில் நிகழ்ந்ததாகவும் அருகில் உள்ள முதல் நடைமேடையில் பயணிகள் யாரும் அப்போது இல்லையெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடத்திற்கு மேல்தளத்தில் அமைந்துள்ள உணவு விடுதியில் தீ விபத்து நிகழ்ந்ததும், முன்பதிவு செய்யும் இடத்திலிருந்தும் அறிவிப்பு தரும் இடத்திலிருந்தும் பணியாளர்கள் விரைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விபத்தால் ஏற்பட்ட தீ, பிற்பகல் 3.30 மணிக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நிகழும் போது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →