வழிபாட்டில் முதல்வர் மோகன் யாதவ் 
இந்தியா

பதவியேற்றதும் கோயிலுக்குச் சென்று வழிபட்ட ம.பி. முதல்வர்!

போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவுக்கு அம்மாநில ஆளுநர் மங்குபாய் சாகன்பாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

DIN


மத்தியப் பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றதைத் தொடர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.இது தொடர்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக ஆட்சி செய்து  வந்த சிவராஜ் சிங் செளகானுக்கு பதிலாக மோகன் யாதவ் புதிய முதல்வராக இன்று பதவியேற்றார். 

போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவுக்கு அம்மாநில ஆளுநர் மங்குபாய் சாகன்பாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து துணை முதல்வர்கள் ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து முதல்வர் மோகன் யாதவ் உஜ்ஜைன் பகுதியிலுள்ள மகாகைலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமிதரிசனம் செய்தார். அவருக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முதல்வரின் குடும்பத்தினரும் வழிபாட்டில் கலந்துகொண்டனர். 

இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. முதல்வராக பதவியேற்றதும் போபாலிலிருந்து உஜ்ஜைன் சென்று சாமிதரிசனம் செய்துள்ளதற்கு பலரும் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருது வாங்கியவருடன்.. தடபுடல் விருந்துடன் இட்லி கடை!

கொண்டாட்டமும் கண்ணீரும்... கார் விபத்தில் உயிரிழந்த ஜோடாவிற்கு சாலா மரியாதை!

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு! எம்எல்ஏ விடுதியில் அமலாக்கத்துறை சோதனை!

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி! டிரம்ப் சூசகம்!

அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT