இந்தியா

பாஜக மாநிலத் துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமனம்!

கேரள மாநில பாஜக துணைத் தலைவராக நடிகர் தேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் தேவன் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் அறிமுகமான தேவன், தென்னிந்திய மொழிகளிலேயே 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பிரதாப் படத்தில் அறிமுகமான இவர் ஜெய்ஹிந்த், பாட்ஷா, உல்லாசம், நெஞ்சினிலே, சிட்டிசன், ஏகன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள மக்கள் இயக்கம் என்கிற கட்சியைத் துவங்கி தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். பின், 2021 முதல் தன் கட்சியை கேரள மாநில பாஜகவுடன் இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், கட்சியின் மாநில துணைத் தலைவராக தேவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

இருமுறை சட்டபேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட தேவன், இதுவரை எந்தத் தொகுதியிலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT