முகப்பு
இந்தியா

யூடியூபரின் அந்தரங்க விடியோ: காவல்துறை விசாரணை

மும்பையைச் சேர்ந்த யூடியூபர் ஒருவரின் விடியோ சமூக வலைதளங்களில் அனுமதியின்றி பதியப்பட்ட விவகாரத்தைக் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
மாதிரி படம் | Pexels
பகிர்:

மும்பை: பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த யூடியூபரின் நிர்வாண விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த விடியோவில் இடம்பெற்ற காட்சிகள் அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியவை. அத்துமீறி இந்தச் செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு யூடியூபர், காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

21 வயதான யூடியூபரின் விடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அழைத்து அவருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

குளியலறையில் இருந்து ஆடைகளின்றி அவர் வெளியே வருவதுபோலான காட்சி அவரது வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

நவ.17-ம் தேதியில் பதிவான காட்சிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →