முகப்பு
கோப்பு
இந்தியா

இந்தியாவில் மீண்டும் கரோனா?

புதிதாக கரோனோ தொற்று ஏற்பட்டவர்களின் விபரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியா

இந்தியாவில் மீண்டும் கரோனா?

புதிதாக கரோனோ தொற்று ஏற்பட்டவர்களின் விபரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
கோப்பு
பகிர்:

புது தில்லி: இந்தியாவில் புதிதாக 237 பேருக்குக் கரானோ வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாகவும் இதனால் நோய் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,185 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கரோனோவால் நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரம் எனவும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 4.50 கோடி பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்கள் 4.40 கோடி பேர். இந்த நோயிலிருந்து குணமாகும் விகிதம் என்பது 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வரை 220.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →