இந்தியா

ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை எப்படி உள்ளது?

ஒடிசாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட குழந்தை அபாயக் கட்டத்தைத் தாண்டியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

DIN

ஒடிசாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட குழந்தை அபாயக் கட்டத்தைத் தாண்டியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஒடிசாவின், சம்பல்பூர் மாவட்டம் லாரிபலி கிராமத்தில் பயன்படுத்தப்படாத 20 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் செவ்வாய்க்கிழமை புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தை சிக்கிக் கொண்டது. குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்ட கிராமத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையின் மற்றும் மீட்புக் குழுவினர் குழந்தையை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. குழந்தை சம்பல்பூரில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. 

ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிய பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ள நிலையில், வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சேர்க்கப்பட்டது. சிறுமியின் உடல் வெப்பநிலை குறைந்த நிலையில் 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குழந்தையின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றது.

இறுதியாக, ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையின் நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 48 மணி நேரக் கண்காணிப்பில்  குழந்தை வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டபோது 1.6 கிலோ எடை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெண் குழந்தையை இதுவரை யாரும் உரிமைக் கோராத நிலையில் இதுதொடர்பாக ரெங்கலி காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT