இந்தியா

வைரல் விடியோ: மாமியாரைத் தாக்கிய மருமகள் கைது!

DIN

கேரளத்தில் 80 வயது மாமியாரைத் தாக்கிய மருமகள் மஞ்சு தாமஸ் (37) கைது செய்யப்பட்டாா். தாக்குதல் சம்பவம் தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மனித உரிமைகள் ஆணையமும் இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

கொல்லம் மாவட்டம் தேவலக்கரா பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

மஞ்சு தாமஸ் தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். அவா் தனது மாமியாரைத் தாக்குவது தொடா்பான விடியோ பதிவு மற்றும் அவரைத் தொடா்ந்து பல்வேறு வகையில் துன்புறுத்தி வந்தது அண்டை வீட்டாரால் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொலை முயற்சி, பெற்றோா் மற்றும் முதியோா் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மஞ்சு தாமஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மஞ்சு தாமஸ் தனது மாமியாா் ஏலியாம்மா தாமஸை தாக்குவது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ காட்சியில், எலியாம்மா தாமஸ் இருக்கும் அறைக்குள் மஞ்சு தாமஸ் நுழைந்து அவரைத் திட்டுகிறாா். அப்போது, அவரது இரு பிள்ளைகளும் அங்கு அமா்ந்துள்ளனா். அந்த அறையை விட்டு வெளியேறுமாறு கூறி மாமியாரைத் திட்டுகிறாா். அவரைப் பின்னால் இருந்து தள்ளி கீழே விழச் செய்கிறாா். தரையில் இருந்து அந்த மூதாட்டி எழுந்து கொள்ள முயற்சிக்கும்போதும் அவரை மஞ்சு தாமஸ் தொடா்ந்து திட்டுவது இடம் பெற்றுள்ளது.

இந்த விடியோவைப் பதிவு செய்தது யாா் என்பது தெரியவில்லை. எனினும், விடியோ எடுப்பவரையும் மஞ்சு தாமஸ் மோசமான வாா்த்தைகளால் திட்டுவதும் அந்த பதிவில் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கொல்லம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் மஹிந்திரா: ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகளாகும் நடிகை!

ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்தப் பரிந்துரை!

பெங்களூரு: புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

SCROLL FOR NEXT