முகப்பு
இந்தியா

நாக்பூரில் கார் மீது லாரி மோதல்: 6 பேர் பலி!

மகாராஷ்டிரத்தின் நாக்பூர் மாவட்டத்தில் கடோல் தாலுகாவில் உள்ள சோன்காம்பில் கார் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:27 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தின் நாக்பூர் மாவட்டத்தில் கடோல் தாலுகாவில் உள்ள சோன்காம்பில் கார் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்கள் அஜய் தஷ்ரத் சிக்லே (45), விட்டல் திகம்பர் தோட் (45), சுதாகர் ராம்சந்திர மான்கர் (42), ரமேஷ் ஓம்கார் ஹெலோண்டே (48), மயூர் மோரேஷ்வர் இங்கிள் (26), வைபவ் சாஹெப்ராவ் சிக்லே (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நாக்பூர் போலீசார் கூறுகையில், 

நாக்பூர், கடோல் தாலுகாவில் உள்ள சோன்காம்பில் நேற்றிரவு கார் மீது லாரி மோதியதில் 6 பேர் இறந்தனர். காயமடைந்தவர்கள் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் இருந்த 7 பேர் நாக்பூரிலிருந்து கடோல் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​லாரி ஒன்று கார் மீது வேகமாக மோதியது. 

விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →