இந்தியா

ஓமன் சுல்தானை வரவேற்ற குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி!

DIN

இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பின் பேரில் ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் பயணமாக நேற்று(வெள்ளிக்கிழமை) இந்தியா வந்தார். இதையடுத்து தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று(சனிக்கிழமை) அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சேர்ந்து  ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை வரவேற்றனர். 

சுல்தானுடன் அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் உடன் வந்துள்ளனர். ஹைதம் பின் தாரிக் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.

தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் சுல்தானுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். 

முன்னதாக கடந்த 2018ல் பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

மீண்டும் வெளிநாடு சென்ற நடிகர் விஜய்!

50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது:மோடி பேச்சு

ஆந்திரம்: மினி வேனிலிருந்து சாலையில் சிதறிய ரூ.7 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT