இந்தியா

தில்லி மேயர் ஷெல்லி ஓபராயின் முகநூல் பக்கம் முடக்கம்

DIN

புது தில்லி: தில்லி மாநகராட்சி மேயர் ஷெல்லி ஓபராய் தனது முகநூல் (ஃபேஸ்புக்) பக்கம் முடக்கம் (ஹேக்) செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை கூறியதுடன், கடந்த சில நாட்களாக தனது சமூக ஊடகப் பக்கத்தை தன்னால் அணுக முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தனது முகநூல் (ஃபேஸ்புக்) பக்கம் முடக்கம் (ஹேக்) செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த சில நாட்களாக தனது சமூக ஊடகப் பக்கத்தை தன்னால் அணுக முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதை விரைவில் மீட்பதற்கான முயற்சிகளை கொள்ளப்பட்டு வருவதாக ஷெல்லி ஓபராய் மேலும் தெரிவித்தார்.

எனது பக்கத்தின் மூலம் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு இருந்தால், அதைப் பற்றி தயவு செய்து, எச்சரிக்கையாக இருங்கள்" என்று ஓபராய் பதிவிட்டுள்ளார்.

வாரத்தின் தொடக்கத்தில்,  எம்சிடியின் இந்து ராவ் மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த மேயர் ஷெல்லி ஓபராய், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக மருத்துவ கண்காணிப்பாளரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

உள்கட்டமைப்பு குறைபாடுகள் கூடிய விரைவில் தீர்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு எம்சிடியின் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT