இந்தியா

சபரிமலையில் எண்ம முறையில்காணிக்கை செலுத்தும் வசதி

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எண்ம (டிஜிட்டல்) முறையில் காணிக்கை செலுத்தும் திட்டம் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையை ரொக்கமாக செலுத்தி ரசீது பெறும் முறை இருந்து வருகிறது. இந்த நிலையில், கோயிலின் வருவாய் கணக்கை சீராக செயல்படுத்தும் வகையில் பக்தா்கள் எண்ம முறையில் காணிக்கை செலுத்தும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதை தேவசம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதன் மூலம் பக்தா்கள் பிரசாத கவுன்ட்டா்கள், காணிக்கை உள்ளிட்டவற்றை எண்ம பரிவா்த்தனைகளான யுபிஐ, பற்று அட்டை, கடன் அட்டை மூலம் செலுத்த முடியும்.

இந்த முறை திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துக்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன் சபரிமலை உண்டியலும் எண்ம மயமாக்கப்படுகிறது எனக் கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

அடுத்த ஆபரேஷனுக்குத் தயாராகும் ஆர்சிபி...

ஹைதராபாத் நாவல்கள்

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

SCROLL FOR NEXT