இந்தியா

சத்தீஸ்கர் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்: முதல்வர் விஷ்ணு தேவ் சாய்

சத்தீஸ்கர் மாநில அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்துள்ளார். 

DIN

சத்தீஸ்கர் மாநில அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்துள்ளார். 

தில்லியிலிருந்து இன்று ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் திரும்பிய அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் நேற்று மாலை தில்லி சென்றேன். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு சிறிது காத்திருக்க வேண்டும், ஆனால் அது விரைவில் செய்யப்படும்.

பழைய மற்றும் புதிய முகங்களின் கலவையாக அமைச்சரவை இருக்கும் என்றார்.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் கடந்த மாதம் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் 54 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. கடந்த முறை 68 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு இம்முறை 35 இடங்களே கிடைத்தன. கோண்ட்வானா கணதந்திரா கட்சி ஓரிடத்தைக் கைப்பற்றியது.

முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமல் இத்தோ்தலை பாஜக எதிா்கொண்டதால் புதிய முதல்வா் குறித்த எதிா்பாா்ப்பு எழுந்தது. மாநிலத்தில் ஏற்கெனவே மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த ரமண் சிங் உள்பட பலரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், புதிய முதல்வராக பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த விஷ்ணு தேவ் சாய் தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையில் புதிய அரசு அண்மையில் பதவியேற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT