இந்தியா

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறது பாஜக அரசு: மம்தா பானர்ஜி கருத்து!

DIN

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, பாஜக அரசு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருவதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இரண்டு நாட்களில் 46 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனநாயகத்தை பாஜக அரசு கேலிக்கூத்தாக்கி வருகிறது என்று கூறினார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி பேசியதாவது, “தவறான நடத்தை என்ற காரணத்தைக் கூறி 46 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக எல்லோரையும் இடைநீக்கம் செய்திருக்க வேண்டியதில்லை. எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தால் அவர்கள் எப்படி குரல் எழுப்புவார்கள்? பாஜக அரசு குற்றவியல் சட்ட மசோதா உட்பட மூன்று முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுகிறது. தேர்தல் நடைபெற்று புதிய அரசு வருவதற்கு இன்னும் நான்கு, ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் இப்போது எதற்காக இந்த முடிவை எடுக்க வேண்டும்? 

புதிதாக பதவியேற்கும் அரசு இந்த முடிவுகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. அனைவரையும் இடைநீக்கம் செய்துவிட்டால் பின்பு மக்களுக்காக யார் குரல் எழுப்புவார்கள்? மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கி வருகிறது.” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிடெக் ஏஐ படிப்புகளை தேர்ந்தெடுக்கலாமா?

ரிஷப் பந்த்தின் அதிரடி டி20 உலகக் கோப்பையிலும் தொடருமா?

ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி!

பாபி தியோலுடன் நடிக்கும் சான்யா மல்ஹோத்ரா!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

SCROLL FOR NEXT