இந்தியா

வாராணசி-தில்லி இடையே 2-வது வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வாராணசி-தில்லி இடையேயான 2-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

DIN

வாராணசி-தில்லி இடையேயான 2-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

செவ்வாய் கிழமை தவிர, வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்த ரயில் வாராணசியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:05 மணிக்கு புதுதில்லி சென்றடையும். பின்னர் மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பி வாராணசிக்கு இரவு 11:05 மணிக்கு வந்தடைகிறது .

தில்லி-வாராணாசி வழித்தடத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு புதுதில்லியில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாராணசியை சென்றடைகிறது. தொடர்ந்து, வாராணசியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் அந்த ரயில் இரவு 11 மணிக்கு புது தில்லி வந்தடைகிறது.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அவரது தொகுதியான வாராணசிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது ரூ.19,000 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை அவர் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT