முகப்பு
இந்தியா

மக்களவையில் சிறப்பு பார்வையாளராக இலங்கை நாடாளுமன்ற தலைவர்!

மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் சிறப்பு பார்வையாளராக இலங்கை நாடாளுமன்ற தலைவர் இன்று பங்கேற்றுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:28 PM
மக்களவையில் சிறப்பு பார்வையாளராக இலங்கை நாடாளுமன்ற தலைவர்
பகிர்:

தில்லி: மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் சிறப்பு பார்வையாளராக இலங்கை நாடாளுமன்ற தலைவர் இன்று பங்கேற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அவைத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான குழுவினர் மக்களவையில் இன்று சிறப்புப் பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

அவர்களை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வரவேற்றார்.

தொடர்ந்து, மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பான பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →