முகப்பு
இந்தியா

பஞ்சாப் எல்லையில் ட்ரோன், போதைப்பொருள்கள் பறிமுதல்!

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸின் அருகேயுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 19 டிசம்பர், 2023 at 1:42 PM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸின் அருகேயுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமிருதசரஸில் உள்ள தானோ குர்த் கிராமத்தில் பிஎஸ்ஃஎப் வீரர்கள் மற்றும் பஞ்சாப் போலீஸார் இணைந்து நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர்.  

அப்போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் 540 கிராம் எடையுள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அப்பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.