கோப்புப்படம் 
இந்தியா

எல்கர் பரிஷத் வழக்கு: கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.

DIN

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடைய வழக்கில், சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் கௌதம் நவ்லகாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

கௌதம் நவ்லகாவின் ஜாமீன் கோரும் மனுவுக்கு நீதிபதி ஏ.எஸ்.கட்காரி அனுமதி அளித்தார். 

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, இந்த உத்தரவை 6 வாரங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் கோரியது.

அதனையடுத்து இந்த உத்தரவை மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

2018 ஆகஸ்ட் மாதம் கௌதம் நவ்லகா கைது செய்யப்பட்டார். 2022 நவம்பர் மாதம் முதல் மும்பையில் உள்ள பொது நூலகத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2022 நவம்பர் மாதம் முதல் பலமுறை வீட்டுக்காவலை நீட்டித்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

ரூ. 1 லட்சம் காப்புத் தொகையாக செலுத்தி ஜாமீனில் வெளிவருவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT