இந்தியா

‘இந்தியா’ கூட்டணி: 20 நாள்களுக்குள் தொகுதிப் பங்கீடு!

‘இந்தியா’ கூட்டணியில் 20 நாள்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

DIN

புதுதில்லி: ‘இந்தியா’ கூட்டணியில் 20 நாள்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டது.

மேலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கி இந்த மாத இறுதியில் முடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது. எனினும், தொகுதி பங்கீடு ஜனவரி 2-ஆம் வாரத்தில் முடிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் திரிணமூல், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, தில்லியில் ஆம் ஆத்மி, தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்க திரிணமூல் காங்கிரஸ் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை அறிவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் முன்மொழிவை கார்கே ஏற்க மறுத்ததாகவும், தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT