கோப்புப்படம் 
இந்தியா

ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது: மல்லிகார்ஜுன கார்கே

பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

DIN

பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை, இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கிண்டல் செய்த விவகாரத்தில், ஜாட் சமூக மக்களை கல்யாண் பானர்ஜி கிண்டல் செய்துவிட்டதாக பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “மாநிலங்களவைத் தலைவரின் கடமை என்பது அவைக்குள் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகும். அவைக்குள் ஜாதியைப் பற்றி பேசுவதன் மூலம் மக்களை தூண்டிவிடக் கூடாது.

நான் கூட அவையில் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. உடனே நான் தலித் என்பதால்தான் எனக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினா்கள் 142 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது, திரிணமூல் காங்கிரஸின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரைப் போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார்.

இந்த செயலைக் குறிப்பிட்டு, ஜகதீப் தன்கர் விவசாயியின் மகன் என்பதால்தான் கிண்டல் செய்ததாகவும், இதன்மூலம் ஜாட் சமூக மக்களை அவர் அவமதித்து விட்டதாகவும் பாஜகவினர் கூறி வரும் வேளையில் மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் நடக்கிறதா? அரசுத் திட்டங்கள் பெயரில் பண மோசடி!

“Karur பற்றிய கேள்விகளைத் தவிர்க்கலாம்!” செந்தில் பாலாஜி காட்டம்! | DMK | TVK | VIJAY

மோலிவுட்டிலிருந்து... அஸ்வதி!

சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்!

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு: 7 பேர் பலி; பலர் மாயம்! - பிரதமர் மோடி இரங்கல்

SCROLL FOR NEXT