முகப்பு
இந்தியா

காதல் மனைவியைக் குத்திக் கொன்ற கணவர் கைது!

உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவில் காதல் மனைவியை 18 முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 20 டிசம்பர், 2023 at 12:21 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:59 PM

உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவில் காதல் மனைவியை 18 முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லக்னௌவில் ஆனந்தேஷ்வர் அக்ரஹாரி(38) பிசியோதெரபிஸ்ட் ஆக உள்ளார்.  மனைவி சந்தியா, தனிஷ்க், சௌரியா இரண்டு மகன்களுடன் ரோஷன் நகரில் வசித்து வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். 

இதுதொடர்பாக துணை ஆணையர் ராகுல் ராஜ் கூறுகையில், 

Advertisement

​​திருமணத்திற்குப் புறம்பான உறவு, பணத் தகராறு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆனந்த்துக்கும் அவரது மனைவி சந்தியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த டிசம்பர் 4-ம் தேதியன்று வாக்குவாதம் வன்முறையாக மாறியது. 

மாற்றுத்திறனாளியான மூத்த மகன் தனிஷ்க் மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தான். இளைய மகன் சௌர்யாவை பள்ளியிலிருந்து அழைத்துவரும் வழியிலேயே மயக்க மருந்தைகொடுத்துத் தூங்க வைத்துள்ளார் தந்தை. 

இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஆனந்த் தனது மனைவியின் கை, கால்களைக் கட்டி சமையலறையில் உள்ள  கத்தியைப் பயன்படுத்தி 18 முறை குத்தியுள்ளார். இதையடுத்து, வீட்டிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். 

பெண்ணின் தாயார் கமலா வீட்டிற்குச் சென்றபோது சந்தியா ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, சம்பவம் குறித்து போலீஸாலீடம் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தை தேடிவந்த நிலையில், லக்னோவின் கிருஷ்ணா நகர்ப் பகுதியில் ஆனந்தேஷ்வர் அக்ரஹாரியை போலீஸார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.