கோப்புப்படம் 
இந்தியா

விடியோ சர்சை: ராகுல் காந்தி விளக்கம்

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி.க்கள் குறித்து பேசாமல், விடியோ விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  தெரிவித்தார்.

DIN

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி.க்கள் குறித்து பேசாமல், விடியோ விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  குற்றம்சாட்டினார்.

ஜகதீப் தன்கா் அவையை வழிநடத்தும் விதத்தை,  திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி கிண்டலாக நடித்துக் காட்டிய விவாரம் குறித்து செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “யார், அவமானப்படுத்தினார்கள்? எப்படி சொல்கிறீர்கள்?, நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர்; அதை நான் விடியோ எடுத்தேன்.

ஊடகங்கள் தொடர்ந்து அதையே காட்டிக் கொண்டிருக்கின்றன, கருத்துகளை வெளியிடுகின்றன. 150 எம்.பி.க்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர், அது பற்றி ஊடகங்களில் எந்த விவாதமும் இல்லை.

எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து யாரும் விவாதிக்கவில்லை. அதானி விவகாரம், ரஃபேல் மோசடி, வேலைவாய்ப்பின்மை குறித்தும் எதுவும் பேசவில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT