இன்ஸ்டாகிராமில் கனிமொழி பகிர்ந்த புகைப்படம். 
இந்தியா

நாங்கள் மீட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை!: கனிமொழி 

மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணியை மீட்கும் காணொலி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கனிமொழி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

DIN

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் சிக்கிக்கொண்ட நிறைமாத கர்ப்பிணியை, மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதியும் மீட்புப்படையினரும் மீட்ட காணொலி வலைதளத்தில் பரவி வந்தது. மீட்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் அனுஷியா, தனது கணவர் பெருமாள் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்துகொண்டது. 

தகவலறிந்த இந்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் கனிமொழி ஆகியோர் அவரை மீட்கும் காணொலி வலைதளத்தில் பரவி வந்தது. மதுரை விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு ஆரோக்கியமான மற்றும் அழகான ஆண்குழந்தை பிறந்ததாக கனிமொழி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்தது தங்கம் விலை!

75 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT