முகப்பு
இந்தியா

பாடத்திட்டத்தின் அங்கமாக வயலில் பயிரிட்டு, அறுவடை செய்த பள்ளி மாணவர்கள்

கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில், விவசாய நிலத்தை பள்ளி மாணவர்களே பயிரிட தயார் செய்து, பயிரிட்டு, தற்போது நெல்லை அறுவடை செய்திருக்கிறார்கள்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:29 PM
பகிர்:


கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில், விவசாய நிலத்தை பள்ளி மாணவர்களே பயிரிட தயார் செய்து, பயிரிட்டு, தற்போது நெல்லை அறுவடை செய்திருக்கிறார்கள்.

பொதுவாக, விவசாயத்தில் வயதானவர்கள் ஈடுபடும் காட்சிகளைத்தான் பார்த்திருப்போம். ஆனால், இங்கு, பள்ளிச் சீருடையில், மாணவர்கள் மிக நேர்த்தியாக நெற் பயிரை அறுவடை செய்து அழகாக அடுக்கிவைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை, திடீரென இதனைப் பார்ப்பவர்கள், என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள இயலாமல் குழம்புவார்கள். வேலைக்கு ஆள் இல்லாததால், குழந்தைத் தொழிலாளர்களாக பள்ளிச் சிறார்கள் மாற்றப்பட்டுவிட்டனரா என்று கூட கருதுவார்கள்.

ஆனால், உத்தர கன்னடாவின் சித்தபுரா தாலுகா, ஹல்கத்ரி கிராமத்தில், அரசுப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்களும், தங்களது பாடப்புத்தகத்தில் இருக்கும் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக விவசாயப் பணியை ஆற்றி வருகிறார்கள் என்பது பிறகுதான் தெரிந்திருக்கும்.

இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு விவசாயம் கற்பிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், மாணவர்களே நேரடியாக விதை விதைத்து, அறுவடை செய்வது வரை அவர்களே அனைத்தையும் மேற்கொள்ள வைப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

மனித வாழ்முறை ஒரு கட்டுக்குள் வந்ததற்கு விவசாயம்தான் அடிப்படை என்பதால், அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால், அதனை ஒரு பாடமாக பள்ளிகளில் வைத்து கற்பிப்பதுதான் ஆச்சரியம்.

பள்ளி ஆசிரியரின் முன்முயற்சியுடன், அப்பகுதி விவசாயிகளும் தங்களது நிலத்தையும் கொடுத்து விவசாயம் செய்வதைக் கற்றுக்கொடுக்க முன்வந்ததாகவும், ஒவ்வொரு ஆண்டும் விருப்பப்படும் மாணவர்கள் தாமே முன்வந்துஇதனை கற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →