இந்தியா

தாயைத் தேடி மும்பை வந்த சுவிட்சர்லாந்து பெண்!

DIN

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வித்யா ஃபிலிப்பன் எனும் பெண் தனது தாயைத் தேடி மும்பைக்கு வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தனது தாயைத் தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

1996 ஆம் ஆண்டும் பிப்ரவரி 8-ல் பிறந்த இவரை, அவரது தாய் மும்பையில் உள்ள அண்ணை தெரசா தொண்டு நிறுவனத்திடம் விட்டுச் சென்றதாகக் கூறியுள்ளார். அங்கு அவரைத் தத்து எடுத்துக்கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டுத் தம்பதி, அவரை ஒரு வயதாக இருக்கும்போது சுவிட்சர்லாந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து பேசிய வித்யா, "நான் பிறக்கும்போது என் தாய்க்கு 20 வயதுதான். அவரது முகவரியை அண்ணை தெரசா தொண்டு நிறுவனம் தந்தது. ஆனால் அந்த வீடு இப்போது உபயோகத்தில் இல்லை. எனது குடும்பப் பெயர் கம்பிலி. என் கணவருடன் இந்தியா வந்திருக்கிறேன்.

பத்து ஆண்டுகளாக என் தாயைத் தேடி வருகிறேன். ஒரு நாள் நிச்சம் அவர்களைக் கண்டுபிடிப்பேன். அதற்கு மும்பை மக்கள் எனக்கு உதவ வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

சுவிட்சர்லாந்திலிருந்து தன் தாயைத் தேடி வந்திருக்கும் இந்தப் பெண்ணுக்கு தத்தெடுப்பு உரிமைகள் அமைப்பின் இயக்குநர் அஞ்சலி பவார் உதவி செய்துவருகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT