இந்தியா

பிரியங்கா காந்தியைச் சந்தித்த சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா!

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியை மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கும் வீரர் பஜ்ரங் புனியாவும் இணைந்து சந்தித்துள்ளனர்.

DIN

இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் நேற்று (டிச.21) மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

தொடர்ந்து, இன்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக முடிவெடுத்துள்ளார். 

ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீராங்கனை கண்ணீருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைத்து தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் பாஜக அரசையும் மல்யுத்த சம்மேளத்தையும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சாக்‌ஷி மாலிக்கும் பஜ்ரங் புனியாவும் இணைந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT