முகப்பு
இந்தியா

ராஜஸ்தான்: அறையில் இருந்த ஹீட்டர் தீப்பற்றியதில் தந்தை, மகள் பலி

ராஜஸ்தானில் வீடு ஒன்றின் அறையில் இருந்த ஹீட்டர் தீப்பற்றியதில் தந்தை, மகள் பலியாகினர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
கோப்புப்படம்
பகிர்:

ராஜஸ்தானில் வீடு ஒன்றின் அறையில் இருந்த ஹீட்டர் தீப்பற்றியதில் தந்தை, மகள் பலியாகினர். 

ராஜஸ்தான் மாநிலம், கைர்தல்-திஜாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் தீபக். நேற்றிரவு இவரது வீட்டின் அறையில் இருந்த ஹீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனே தீ அறையில் இருந்த மெத்தைக்கும் பரவியது. 

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு தீபக் மற்றும் அவரது 3 மாத மகள் நிஷிகா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தீபக்கின் மனைவி சஞ்சு தீக்காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →