சாதி கேட்டு காதலர்களைத் தொல்லை செய்த மூவர் கைது!
மங்களூருவில் பொது இடத்தில் காதலர்களின் சாதியைக் கேட்டு தொல்லை செய்த மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் காதலர்களை அவர்களது அடையாள அட்டை கேட்டு மிரட்டி தொந்தரவு செய்த நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த அந்த இளம் ஜோடியின் சாதியைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களது அடையாள அட்டைகளைக் கேட்டு ஒருவர் அவர்களைத் தொந்தரவு செய்துள்ளார்.
அவரைத் தவிர்க்க முயன்ற ஜோடியை, பொது இடத்தில் கத்தி தொந்தரவு செய்துள்ளார். இருவரும் அந்த இடத்திலிருந்து வெளியேறிய பின்னரும் அவர்களைப் பின்தொடர்ந்து தொல்லை செய்துள்ளார்.
Advertisement
ஆட்டோவில் ஏறிய அந்த ஜோடியை நிறுத்தி, மேலும் இரண்டு நபர்களுடன் சேர்ந்து துன்புறுத்தியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.