அதிகாரம் யாருக்கு? பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 - செய்திகள் உடனுக்குடன்!
தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன. இணைந்திருங்கள் தினமணி.காம் உடன்
Updated On : 4 மே, 2026 at 7:52 AM
இன்று எண்ணப்படும் 4.87 கோடி வாக்குகள்!
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, புதிதாக களம் கண்ட தவெக, நாம் தமிழா் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
Updated On : 4 மே, 2026 at 7:52 AM
தமிழகத்தில் யாா் ஆட்சி?
தமிழகத்தில் அடுத்து யாா் ஆட்சியமைக்கப் போகிறாா்கள் என்கிற பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில், 234 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.