புது தில்லி: காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது இளைஞர் சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு தில்லியில் உள்ள பஞ்சன்புரா பகுதியில் டிச.12 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 17 வயது இளைஞருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பெரியவர்களின் தலையீட்டால் சுமூகமாக பிரச்னை முடிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் டிச. 15 அன்று மாலை 5 மணிக்கு அந்த இளைஞர், பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார். முகத்திலும் நெற்றியிலும் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நினைவை இழந்துள்ளார்.
சனிக்கிழமை இரவு 10.30-க்கு அவர் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிக்க: கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 காவலர்கள் மீது வழக்குப் பதிவு
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.