இந்தியா

மேகாலயாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்!

DIN

மேகாலயாவில் சனிக்கிழமை இரவு முதல் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேகாலயா மாநிலத்தின் தூப்ரி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

முன்னதாக, சனிக்கிழமை இரவு 7.25 மணிக்கு மேகாலயாவின் கிழக்கு காரோ மலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது.

இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

4 ரிக்டர் வரையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும். இவற்றால் மிக அரிதாகவே சேதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT