இந்தியா

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் ஒரேநாளில் 67,906 பக்தர்கள் தரிசனம்!

DIN

வைகுண்ட ஏகாதரியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 67,906 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

ஏனைய வைணவ தலங்களில் வடக்கு வாயில் என்று அழைக்கப்படும் சொா்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் அதன் வழியாக ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து பக்தா்களுக்கு அருள்புரிகிறாா். ஆனால் திருமலையில் வடக்கு வாயில் இல்லாததால், ஏழுமலையான் கருவறையை சுற்றியுள்ள உட்புற பிரகாரத்தை திறந்து அதன் வழியாக செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

அதன்படி சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு வைகுண்ட வாயிலுக்கு பூஜைகள் செய்து வாயில் திறக்கப்பட்டது. அதன் வழியாக முதலில் ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் சென்று வெளியே வந்தனா்.பின்னா் விஐபிக்கள் தரிசனம் நடைபெற்றது. குறிப்பிட்ட நேரத்தை விட 45 நிமிஷங்கள் முன்னதாக சனிக்கிழமை காலை 5.15 மணி முதல் சா்வ தரிசனம் தொடங்கப்பட்டது.

அதன்பிறகு, பக்தா்கள் ஒதுக்கீடு வாரியாக சிறப்பு நுழைவு மற்றும் பொது தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதரியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 67,906 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.ரூ.2.50 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 28,492 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT