இந்தியா

‘ஜெஎன்.1’ தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் தேவையில்லை: மத்திய சுகாதாரத் துறை

கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

DIN

கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு இத்தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 23 பேருக்கு ‘ஜெஎன். 1’ வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கரோனா பரவல் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உரிய பொது சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதனிடையே ஓமைக்ரான் கரோனா மாறுபாடுகளை எதிர்கொள்வதற்காக தனது தடுப்பூசியை கொண்டு வருவதற்கான பணிகளை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தொடங்க உள்ளது என தகவல் வெளியானது.

இந்த நிலையில், கரோனா பரவல் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உரிய பொது சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து,

கரோனா தொற்றுக்கு எதிரான மற்றும் புதிய வகையான ‘ஜெஎன்.1’ எதிரான தடுப்பூசியின் கூடுதல் நான்காவது பூஸ்டர் டோஸ் தேவையில்லை என்றும், பூஸ்டர் டோஸ் பரிந்துரைக்க எந்த நடவடிக்கையும் இல்லை. குளிர்காலம் என்பதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தொற்றின் வீரியும் குறைவுதான். பொதுமக்கள் பீதி அடையாமல் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், கூட்டம் அதிமான இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று அறிகுறிகளாக காய்ச்சல், மூக்கிலிருந்து நீர் வடிதல், இருமல், அவ்வப்போது வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் ஆகியவை பாதிப்புகள் மட்டும் ஏற்படும். பாதிக்கப்படுவோர் பொதுவாக ஒரு வாரத்திற்குள் குணமடைந்து விடுவர். ஏற்கனவே மாநிலங்களுக்கு பரிசோதனையை அதிகரிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்று மேலும் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT