இந்தியா

வாஜ்பாய் பிறந்தநாள் - பிரதமர் மோடி மரியாதை 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

DIN

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 99வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தில்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, துணை குடியரசுத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா,மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். 

பிரதமராக பதவியேற்ற முதல் பாஜக தலைவரான வாஜ்பாய், அக்கட்சியை பிரபலப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரா். கடந்த 1998 முதல் 2004 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில், பல்வேறு சீா்திருத்தங்களை முன்னெடுத்த அவா், நாட்டின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தினாா். கடந்த 2018-ஆம் ஆண்டில் தனது 93-ஆவது வயதில் வாஜ்பாய் காலமானாா். 

இதனிடையே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், சுதந்திரப் போராட்ட வீரரும் கல்வியாளருமான மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் மாளவியாவின் ஒப்பற்ற ஆளுமையும் பணியும் நாட்டில் உள்ள ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

SCROLL FOR NEXT