கோப்புப்படம் 
இந்தியா

குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 புதிய மசோதாக்களை மத்திய அரசு சில திருத்தங்களுடன் கடந்த 12-ஆம் தேதி மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்தது.

இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக அந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய மசோதாக்களுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் கடந்த புதன்கிழமை(டிச.20) ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து 3 புதிய மசோதாக்களும் சட்டமாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

சும்மா இரு மனமே... நந்திதா ஸ்வேதா!

நீலகிரி, கோவைக்கு நாளை(ஆக. 5) ரெட் அலர்ட்!

சப்தமின்றி தனிமையில்... கர்விதா சத்வானி

தமிழ்நாடுதான் இந்திய மின் வாகன உற்பத்தியின் Capital - முதல்வர் Stalin

SCROLL FOR NEXT