இந்தியா

இளைஞர்கள், போதை பொருள்களைத் தவிர்க்க வேண்டும்: மோடி

DIN

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, சீக்கிய குருக்கள் இந்தியர்களுக்கு தங்களின் நிலத்தின் பெருமையோடு வாழ்வது குறித்து வழிகாட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டினை மேம்படுத்தவும் வளர்ச்சியடைய செய்யவும் வேண்டிய உத்வேகம் அவர்களின் மூலம் பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

குரு கோபிந்த் சிங்கின் மகன்கள் இருவரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கடைபிடிக்கப்படும் ‘வீர் பால் திவாஸ்’ நிகழ்வில் கலந்து கொண்ட மோடி இவ்வாறு கூறினார்.

அரசு தெளிவான இலக்குக் கொண்டிருப்பதாகவும் நாட்டின் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும் திட்டத்தில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்கவும் டிஜிட்டல் மோகத்தில் இருந்து வெளியே வரவும் போதை பொருள்களைத் தவிர்க்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.

போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுக்குமாறு மத தலைவர்களைவும் சமூக அமைப்புகளையும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT