விசாகப்பட்டினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனகாபல்லி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
உயிரிழந்தவர்கள் சிவராமகிருஷ்ணன்(40) அவரது மனைவி மாதவி(38) இரு மகள்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், குண்டூர் மாவட்டம் தெனாலி நகரைச் சேர்ந்த நகைத் தொழில் செய்துவந்த ராமகிருஷ்ணா, சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக அனகாபல்லி நகருக்குச் சென்று அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நிதி நெருக்கடி காரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் வியாழக்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நால்வரை மீட்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் மூவர் இறந்துள்ளதாகவும், ஒருவர் உயிருக்குப் போராடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.