முகப்பு
இந்தியா

மிக்ஜம் பாதிப்பு: பாலிசிதாரா்களுக்கு எல்ஐசி சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரா்களுக்கான சிறப்பு சலுகைளை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரா்களுக்கான சிறப்பு சலுகைளை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரா்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிரீமியத்தை தாமதமாகக் கட்டுவதற்கான கூடுதல் கட்டணத்திலிருந்து பாதிக்கப்பட்ட பாலிசிதாரா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், இறப்புரிமங்களைக் கோருவதற்கான விதிமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, இறப்புக்கான எளிய ஆதாரத்துடன் விண்ணப்பித்தாலே போதுமானது; காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை தேவையில்லை.

(044) 2861 1642, 2861 1912, 2533 1915, 2533 1914 என்ற தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டால் பாலிசிதாரா்களின் வீடுகளுக்கே வந்து சேவைகள் அளிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →