ஹேமந்த் சோரன் (கோப்புப் படம்) 
இந்தியா

ஜார்கண்ட் முதல்வருக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 7-வது முறையாக அமலாக்கத் துறை சனிக்கிழமை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. 

DIN

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 7-வது முறையாக அமலாக்கத் துறை சனிக்கிழமை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. 

சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க வழக்கில் ஹேமந்த் சோரனிடம் கடந்த ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி அமலாக்கத் துறை சுமாா் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அதன்பிறகு, ராணுவ நில முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பாக விசாரிக்க ஆகஸ்ட் 14-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அப்போதும் அவா் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து ஜார்கண்ட் முதல்வரை நேரில் ஆஜராக கோரி ஏற்கனவே 6 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், இந்த முறை அறிக்கையை பதிவு செய்து இது அவருக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

ஜார்க்கண்ட் முதல்வர் சம்மனைத் தொடர்ந்து புறக்கணிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

நம்பி ஏமாறுபவர்கள் இந்த ராசிக்காரர்கள்!

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!

பூங்காற்று... கீர்த்தி சுரேஷ்!

பாபா ராம்தேவ் மீதான வழக்கு: சத்தீஸ்கர் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல்! அடுத்து என்ன?

SCROLL FOR NEXT