அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி. 
இந்தியா

ஜனவரி 22 தீபாவளி கொண்டாடுங்கள்!: பிரதமர் மோடி

அயோத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களை ஜனவரி 22 அன்று அவர்கள் வீட்டில் தீபமேற்றி தீபாவளி கொண்டாடுமாறு கூறியுள்ளார். 

DIN

அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டத்தை சந்தித்த பிரதமர் மோடி, நாட்டின் 140 கோடி மக்களை ஜனவரி 22 அன்று அவர்கள் வீட்டில் தீபமேற்றி தீபாவளி கொண்டாடுமாறு கூறியுள்ளார். 

வரும் ஜனவரி 22ஆம் நாளில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்வு நடைபெறவுள்ளது. எனவே நாட்டு மக்கள் அனைவரையும் அந்த நிகழ்வுக்காக உற்சாகமடையுமாறு கூறியுள்ளார். 

மேலும் பேசிய அவர் 'புதிய அயோத்தி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களை துவக்கிவைத்த பெருமையை அடைகிறேன். இந்த விமான நிலையத்துக்கு வால்மீகியின் பெயரை வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

ராமர் கோயில் முழுதாகக் கட்டி முடிக்கப்பட்டபின் இங்கு மக்கள் அதிகமாக வருவார்கள். அதை கவனத்தில் கொண்டு பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான திட்டங்களை அயோத்தியில் அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது. ஸ்மார்ட் அயோத்தி உருவாகப்போகிறது' எனவும் அவரது உரையில் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவை மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

காவிரி டெல்டா பகுதியில் தொடர் மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் அழிப்பு! எல்லைப் பாதுகாப்புப் படை

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி!

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT