இந்தியா

காற்றின் தரம் 'மிகவும் மோசம்', ரயில், விமான சேவைகளில் தாமதம்!

DIN

தலைநகர் தில்லியில் நிலவும் கடுமையான புகை மற்றும் மூடுபனியால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 80 விமானங்கள், 30 ரயில்கள் தாமதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பஞ்சாப், ஹரியானா, தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற பகுதிகளில் ரயில்வே, விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.8 டிகிரி செல்சியஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்று தில்லியில் காற்றின் தரம் 399 புள்ளிகளில் 'மிகவும் மோசமான' நிலையில் உள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காற்றின் தரம் 50 புள்ளிகளைப் பெற்றிருப்பதே உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT