முகப்பு
இந்தியா

அயோத்தி: உஜ்வாலா திட்ட பயனாளியின் வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி

அயோத்தியில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி தேநீர் அருந்தினார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

அயோத்தியில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி தேநீர் அருந்தினார்.

அயோத்தியில் ரூ.11,100 கோடிக்கும் அதிக மதிப்பில் பணி நிறைவடைந்த பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கிவைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். உத்தர பிரதேசத்தின் இதர பகுதிகளில் ரூ.4,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார்.

அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், பல்வேறு வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம், நகரில் விரிவுபடுத்தப்பட்டு அழகூட்டப்பட்ட சாலைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். பின்னர் ’பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளி மீரா மாஞ்சி வீட்டிற்கு பிரதமர் மோடி திடீரென சென்றார். 

தொடர்ந்து அங்கு தேநீர் அருந்திய பிரதமர் மோடி, மீராவின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அப்போது, மீரா தனக்கு இலவச எரிவாயு மற்றும் தங்குமிடம் கிடைத்துள்ளதாக பிரதமரிடம் தெரிவித்தார். இதையடுத்து, கோயில் நகரத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய மோடி, “இன்று உஜ்வாலா எரிவாயு இணைப்பின் 10-வது கோடி பயனாளியின் வீட்டில் தேநீர் அருந்தியதை குறிப்பிட்டார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →