முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் அமைச்சரவை இன்று பதவியேற்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததையொட்டி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருமாத காலம் ஆனபிறகு, அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வழிநடத்தலில் பிற்பகல் 3.30 மணிக்கு எம்எல்ஏக்களின் உறுதிமொழியேற்பு விழா நடைபெறவுள்ளது.

ராம்கஞ்ச் மாண்டி தொகுதியின் எம்எல்ஏ மதன் தில்வார், பாஜக அலுவலகத்துக்கு சென்று மூத்த தலைவர்களைச் சந்தித்தார்.

அதே போல கார்ஹி மற்றும் உதய்பூர் எம்எல்ஏக்களும் ராஜ் பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. 18 முதல் 20 பேர் புதியவர்கள் மற்றும் மூத்த கட்சியினர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கலாம் எனத் தெரிகிறது.

அமைச்சரவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, வெள்ளிக்கிழமை தில்லி விரைந்தார்.

டிச.3 அன்று ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டபோதும் பஜன்லால் தலைமையில் அமைச்சரவை அமைக்க பாஜக இத்தனை காலம் எடுத்துக் கொண்டுள்ளது.

199 தொகுதிகளில் 115-ல் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் காங்கிரஸிடம் இருந்து கை பற்றியது.

முதல் முறை எம்எல்ஏவான பஜன் லால் முதல்வராகவும் தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைர்வா துணை முதல்வர்களாகவும் பாஜக அறிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →