இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

DIN

மத்தியப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சிங்ரௌலி பகுதியில் இன்று (டிச.31) பிற்பகல் 2.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இல்லை. 

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

4 ரிக்டர் வரையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும். இவற்றால் மிக அரிதாகவே சேதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் இரா.ராஜவேலு

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT