அதானி குழும பங்கு விற்பனை ரத்து
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய முறைகேடு புகாரால் அதானி குழும பங்குகள் அண்மை நாள்களாக பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் 15ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கௌதம் அதானி.
இதனிடையே அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20,000 கோடிக்கு பங்குகளை விற்க திட்டமிட்டிருந்தது.
முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்க விண்ணப்பித்து பணம் செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் பங்கு விற்பனையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கவும் அதானி குழுமம் முடிவு செய்துள்ளது.